ADDED : ஜூன் 05, 2024 04:35 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,சில் வாரந்தோறும் மஞ்சள் ஏலம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மஞ்சள் அறுவடை மற்றும் வேகவைப்பது, காய வைப்பது உள்ளிட்ட பணிகள் முற்றுலும் பாதிக்கப்பட்டன. இதனால், நேற்று மஞ்சள் மூட்டை வரத்து, 50 மூட்டைக்கும் குறைவாக இருந்ததால் ஆர்.சி.
எம்.எஸ்.,சில் மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது.