/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பள்ளிப்பாளையம் நகராட்சியில் தொய்வு நிலையில் குடிநீர் பணி பள்ளிப்பாளையம் நகராட்சியில் தொய்வு நிலையில் குடிநீர் பணி
பள்ளிப்பாளையம் நகராட்சியில் தொய்வு நிலையில் குடிநீர் பணி
பள்ளிப்பாளையம் நகராட்சியில் தொய்வு நிலையில் குடிநீர் பணி
பள்ளிப்பாளையம் நகராட்சியில் தொய்வு நிலையில் குடிநீர் பணி
ADDED : ஜூன் 30, 2024 01:45 AM
பள்ளிப்பாளையம், ஜூன் 30-
பள்ளிப்பாளையம் நகராட்சியில் மத்திய, மாநில அரசு நிதி, 17.77 கோடி ரூபாயில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு பணி, கடந்த ஓராண்டுக்கு முன் துவக்கப்பட்டது. ஆனால், பணிகள் மிகவும் தொய்வு நிலையில் நடந்து வருகிறது. ஓராண்டிற்குள் முடிக்கப்பட வேண்டிய இப்பணி இதே நிலையில் இருந்தால், இரண்டாண்டு ஆகிவிடும். அந்தளவுக்கு பணிகள் தொய்வு நிலையில் காணப்படுகிறது.
குடிநீர் பணிக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளமும் சரியாக சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் டூவீலரில் செல்லும் வயதானவர்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, கலெக்டர், குடிநீர் பணியை ஆய்வு செய்து, தொய்வு நிலையில் உள்ள பணியை, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.