/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ காவிரியாற்றில் கழிவுகளை கொட்டுவதால் தண்ணீர் மாசு காவிரியாற்றில் கழிவுகளை கொட்டுவதால் தண்ணீர் மாசு
காவிரியாற்றில் கழிவுகளை கொட்டுவதால் தண்ணீர் மாசு
காவிரியாற்றில் கழிவுகளை கொட்டுவதால் தண்ணீர் மாசு
காவிரியாற்றில் கழிவுகளை கொட்டுவதால் தண்ணீர் மாசு
ADDED : ஜூன் 06, 2024 04:19 AM
பள்ளிப்பாளையம்,: ஆவத்திபாளையம் காவிரி ஆற்றுப்பகுதியில் தொழிற்சாலை, இறைச்சிக்கழிவு, குப்பை கொட்டுவதால் தண்ணீர் மாசடைகிறது.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் பகுதி காவிரி ஆற்றோரத்தில் தொழிற்சாலை, சாய ஆலை, இறைச்சி கழிவுகள், குப்பையை வாகனத்தில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். அவ்வாறு கொட்டப்படும் கழிவு, குப்பை சில நாட்களிலேயே ஆற்று தண்ணீரில் கலந்து விடுகின்றன. இதனால் தண்ணீர் மாசடைகிறது. தண்ணீர் மாசடைவதால் மீன்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.எனவே, ஆற்றுப்பகுதியில் கழிவு, குப்பை கொட்டுவோர் மீதும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, களியனுார் பஞ்., தலைவர் ரவிகுழந்தைவேல் கூறியதாவது:ஆவத்திபாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் தொழிற்சாலை, சாய ஆலை கழிவுகள், குப்பைகள் கொட்டுவதாக வந்த புகாரையடுத்து, கடந்த மாதம் குப்பை கொட்ட வந்த வாகனத்தை பிடித்து எச்சரிக்கை செய்தோம். மேலும், குப்பை, தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுக்கவும், கண்காணிக்கவும் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.