/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குழாய் உடைந்து குடிநீர் வீண் கண்டுகொள்ளாத டவுன் பஞ்., குழாய் உடைந்து குடிநீர் வீண் கண்டுகொள்ளாத டவுன் பஞ்.,
குழாய் உடைந்து குடிநீர் வீண் கண்டுகொள்ளாத டவுன் பஞ்.,
குழாய் உடைந்து குடிநீர் வீண் கண்டுகொள்ளாத டவுன் பஞ்.,
குழாய் உடைந்து குடிநீர் வீண் கண்டுகொள்ளாத டவுன் பஞ்.,
ADDED : ஜூன் 19, 2024 02:29 AM
ப.வேலுார், பாண்டமங்கலம் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதி
யில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகியது. ஆனால், டவுன் பஞ்., நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
ப.வேலுார் அருகே, பாண்டமங்கலத்தில், 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ப.வேலுாரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் பிரதான சாலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே குடிநீர் இணைப்பு உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், டவுன் பஞ்., நிர்வாகத்துக்கு தெரிவித்தும், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து டவுன் பஞ்., நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும், அதற்குரிய உதிரிபாகங்கள் இன்னும் வரவில்லை என, தெரிவித்து அலட்சியமாக விட்டனர். இதனால் ஏராளமான குடிநீர் வீணாகி வருகிறது. உடனடியாக குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.