ADDED : ஜூலை 18, 2024 01:13 AM
நாமக்கல்: குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் சிந்தனை பேரவை சார்பில், தமிழ்க்கூடல், கல்வி வளர்ச்சி நாள், காமராஜர் பிறந்தநாள் விழா என, முப்பெரும் விழா நடந்-தது.
தமிழ் சிந்தனை பேரவை தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் சாரதா வரவேற்றார். விழாவில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில், தமிழில் முதன் மதிப்பெண் பெற்ற மாணவியர் காவியாஸ்ரீ, தியா, மகேஸ்வரி, மதுஸ்ரீ, அனுஷ்யா, கனிகா ஆகியோருக்கு, 'தமிழ்ச் சுடர்' விருதும், நாலடியார் நுாலும் பரிசாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து, காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு, சான்-றிதழ் வழங்கப்பட்டது. தமிழாசிரியர் ரேவதி நன்றி கூறினார்.
சமூக ஆர்வலர்கள் பராசக்தி, மணிகண்டன், ஆசிரியர்கள் மாணிக்கம், கல்பனா, தீபா, ராஜா மணி உள்பட பலர் பங்கேற்-றனர்.