/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தண்டு மாரியம்மன் கோவிலில்திருவிளக்கு பூஜை கோலாகலம் தண்டு மாரியம்மன் கோவிலில்திருவிளக்கு பூஜை கோலாகலம்
தண்டு மாரியம்மன் கோவிலில்திருவிளக்கு பூஜை கோலாகலம்
தண்டு மாரியம்மன் கோவிலில்திருவிளக்கு பூஜை கோலாகலம்
தண்டு மாரியம்மன் கோவிலில்திருவிளக்கு பூஜை கோலாகலம்
ADDED : ஜூலை 20, 2024 02:42 AM
ராசிபுரம்:ஆடி முதல் வெள்ளியையொட்டி, ராசிபுரம் தண்டு மாரியம்மன் கோவிலில், 508 திருவிளக்கு பூஜை கோலாகலமாக நடந்தது.ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில், அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம்.
அதன்படி, ராசிபுரம் பட்டணம் தண்டு மாரியம்மன் கோவிலில், ஆடி முதல் வெள்ளி மற்றும் உலக அமைதி வேண்டியும், நாடும் நாமும் நலம் பெற வேண்டியும், 508 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. முன்னதாக, அம்மனுக்கு பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.