/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'புள்ளிங்கோ' ஸ்டைலில் வந்த மாணவர்கள் 'சம்மர் கட்டிங்' செய்து அனுப்பிய ஆசிரியை 'புள்ளிங்கோ' ஸ்டைலில் வந்த மாணவர்கள் 'சம்மர் கட்டிங்' செய்து அனுப்பிய ஆசிரியை
'புள்ளிங்கோ' ஸ்டைலில் வந்த மாணவர்கள் 'சம்மர் கட்டிங்' செய்து அனுப்பிய ஆசிரியை
'புள்ளிங்கோ' ஸ்டைலில் வந்த மாணவர்கள் 'சம்மர் கட்டிங்' செய்து அனுப்பிய ஆசிரியை
'புள்ளிங்கோ' ஸ்டைலில் வந்த மாணவர்கள் 'சம்மர் கட்டிங்' செய்து அனுப்பிய ஆசிரியை
ADDED : ஜூன் 19, 2024 10:54 AM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அரசு பள்ளிக்கு, 'புள்ளிங்கோ' ஸ்டைலில் வந்த மாணவர்களை, சலுான் கடைக்கு அழைத்து சென்று, 'சம்மர் கட்டிங்' அடித்து அனுப்பிய உடற்கல்வி ஆசிரியையை, பெற்றோர் வெகுவாக பாராட்டினர்.
ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் அரசு மேல்நிலை பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்தபோது, 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பெரும்பாலும், தலையில் அதிகளவு முடியை வளர்த்துக்கொண்டு வந்தனர். சிலர்,'புள்ளிங்கோ' ஸ்டைலில் வந்தனர்.
இதை பார்த்த அப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை, 'மாணவர்கள் அனைவரும் எவ்வித ஸ்டைலும் இல்லாமல் முடி வெட்டி வர வேண்டும்' என, எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் பின், மூன்று நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து மாணவர்கள், நேற்று காலை பள்ளிக்கு வந்தனர். அப்போது, பள்ளி நுழைவாயிலில் நின்றபடி உடற்கல்வி ஆசிரியை கண்காணிப்பில் ஈடுபட்டார். பல மாணவர்கள் முடியை வெட்டிக்கொண்டு வந்தனர். 25க்கும் மேற்பட்ட மாணவர்கள், 'புள்ளிங்கோ' ஸ்டைலில் பள்ளிக்குள் நுழைந்தனர். அவர்களை கேட்டில் வைத்து மடக்கிய ஆசிரியை, அருகில் உள்ள சலுானுக்கு அவரே கூட்டிச் சென்று, 'சம்மர் கட்டிங்' அடிக்க வைத்தார். இதனால், மாணவர்கள் செய்வதறியாது சோகத்தில் தவித்தனர்.
பெற்றோர் பேச்சை கேட்காமல் மாணவர்கள் இதுபோன்று முடி வளர்த்து வந்துள்ளனர். ஆனால், உடற்கல்வி ஆசிரியை விடாப்பிடியாக முடியை வெட்ட வைத்ததால், பெற்றோர் அவரை வெகுவாக பாராட்டினர்.