/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க திருத்த சிறப்பு குறைதீர் முகாம் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க திருத்த சிறப்பு குறைதீர் முகாம்
ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க திருத்த சிறப்பு குறைதீர் முகாம்
ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க திருத்த சிறப்பு குறைதீர் முகாம்
ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க திருத்த சிறப்பு குறைதீர் முகாம்
ADDED : ஜூன் 14, 2024 01:41 AM
மோகனூர்,
'ரேஷன் கார்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம், நாளை நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்
குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் அட்டை கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்கவும், பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், நாளை காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கவுள்ளது.
எனவே, பொதுமக்கள் மேற்படி குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தீர்வு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.