/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மதுபாட்டிலில் விஷ நாற்றம் சோதனைக்கு அனுப்பி வைப்பு மதுபாட்டிலில் விஷ நாற்றம் சோதனைக்கு அனுப்பி வைப்பு
மதுபாட்டிலில் விஷ நாற்றம் சோதனைக்கு அனுப்பி வைப்பு
மதுபாட்டிலில் விஷ நாற்றம் சோதனைக்கு அனுப்பி வைப்பு
மதுபாட்டிலில் விஷ நாற்றம் சோதனைக்கு அனுப்பி வைப்பு
ADDED : ஜூன் 25, 2024 02:04 AM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், கரடிப்பட்டி பஞ்., கொண்டம்பட்டியில் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்று வருவதாக இன்ஸ்பெக்டர் கோமதிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பழனிசாமி, 48, என்பவரின் வீட்டின் எதிரே, கடலை போர் பகுதியில் இருந்து போலீசாரை கண்டதும் சிலர் ஓட்டம் பிடித்தனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்த போது, பழனிசாமி என்பவர் புதன்சந்தை, பொம்மைகுட்டைமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து சில்லரையாக மதுபாட்டில்களை வாங்கி வந்து, அதை மொத்தமாக வைத்து அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 20 மதுபாட்டில்களை சோதனை செய்தனர். அப்போது, மூடி திறந்திருந்த ஒரு பாட்டிலில் இருந்து விஷ நாற்றம் வீசியதால், அந்த மதுபாட்டிலை போலீசார் ரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்தனர்.