/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குட்கா விற்ற கடைகளுக்கு 'சீல்' ரூ.75,000 அபராதம் விதிப்பு குட்கா விற்ற கடைகளுக்கு 'சீல்' ரூ.75,000 அபராதம் விதிப்பு
குட்கா விற்ற கடைகளுக்கு 'சீல்' ரூ.75,000 அபராதம் விதிப்பு
குட்கா விற்ற கடைகளுக்கு 'சீல்' ரூ.75,000 அபராதம் விதிப்பு
குட்கா விற்ற கடைகளுக்கு 'சீல்' ரூ.75,000 அபராதம் விதிப்பு
ADDED : ஜூன் 17, 2024 01:29 AM
ப.வேலுார்: ப.வேலுாரில் பல இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா அதிக விலையில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ப.வேலுார், பாண்டமங்கலம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சில தினங்களுக்கு முன் போலீசார் டீக்கடை, மளிகை கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு கடைகளில் குட்கா பறிமுதல் செய்தனர். ப.வேலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பாக உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துச்சாமி மற்றும் ப.வேலுார் போலீசார் குட்கா விற்ற இரண்டு கடைகளுக்கு, நேற்று, 'சீல்' வைத்து, 75,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 21 நாட்களுக்கு கடை திறக்க அனுமதி இல்லை.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குட்கா விற்பனையில் ஈடுபடும் கடைகளை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். குட்கா தடை பொருட்கள் விற்பன செய்வோர், குறிப்பாக பள்ளி, கல்லுாரி அருகே விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,என உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி தெரிவித்தார்.