/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கோழிப்பண்ணைகளில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளர் 6 பேர் மீட்பு கோழிப்பண்ணைகளில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளர் 6 பேர் மீட்பு
கோழிப்பண்ணைகளில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளர் 6 பேர் மீட்பு
கோழிப்பண்ணைகளில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளர் 6 பேர் மீட்பு
கோழிப்பண்ணைகளில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளர் 6 பேர் மீட்பு
ADDED : ஜூலை 04, 2024 10:54 AM
நாமக்கல்: கோழிப்பண்ணைகளில் பணிபுரிந்த சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த, 6 பேரை, வருவாய் துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் தனிராம்காவ்டே, 23. அதே மாநிலத்தை சேர்ந்த கரீனா, தாய்ஸ்ரீ, மைனி, பாலிராம் மற்றொரு கரீனா ஆகியோர் பீஹார் மாநிலத்தை சேர்ந்த கிேஷார் என்பவர் மூலம், தமிழகத்திற்கு வேலைக்கு வந்துள்ளனர். ஏஜன்டாக செயல்பட்ட கிேஷார், அவர்களை, நாமக்கல் மாவட்டம், நாட்டாமங்கலம், அக்கரைப்பட்டி, வளையப்பட்டி பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில், மூன்று மாதம் ஒப்பந்தத்தில் பணிக்கு சேர்த்துவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, 9 மாதம் முடிந்தும், கோழிப்பண்ணை உரிமையாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப மறுப்பதாகவும், சம்பளம் சரியாக தருவதில்லை என்றும் புகார் எழுந்தது. இது குறித்து, வருவாய் துறையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைகளுக்கு சென்ற வருவாய் துறையினர், சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த, 6 பேரையும் மீட்டு, அவர்களை கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்துகின்றனர். இச்சம்பவம், நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.