ADDED : ஜூலை 26, 2024 03:02 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, கஸ்துாரிப்பட்டி ஏரிக்கரை சாலையில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எருமப்பட்டி யூனியன், செல்லிபாளையம் ஏரிக்கரையில் இருந்து கஸ்துாரிப்பட்டி வழியாக முட்டாஞ்செட்டி செல்லும் சாலை உள்-ளது. இந்த சாலையில், 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்-ளதால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என ஏராள-மானோர் டூவீலர்களிலும், நடந்தும் சென்று வருகின்றனர். இந்நி-லையில், கஸ்தூரிப்பட்டி ஏரிக்கரை தார் சாலையில், பாதி வரை கருவேலம் முட்புதர்கள் உள்ளதால், இரவு நேரங்களில் டூவீலர்-களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். முட்புதர்களால் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை உள்ளது. எனவே, இதை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.