/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ப.வேலுாரில் இன்று ரேஷன் குறைதீர் முகாம் ப.வேலுாரில் இன்று ரேஷன் குறைதீர் முகாம்
ப.வேலுாரில் இன்று ரேஷன் குறைதீர் முகாம்
ப.வேலுாரில் இன்று ரேஷன் குறைதீர் முகாம்
ப.வேலுாரில் இன்று ரேஷன் குறைதீர் முகாம்
ADDED : ஜூன் 16, 2024 12:47 PM
ப.வேலுார்: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், ப.வேலுார் தாலுகா அலுவலகத்தில் பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம், இன்று நடக்கிறது. காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கும் முகாமில், பொதுமக்கள் தங்களது ரேஷன் தொடர்பான குறைகளை, வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு பெறலாம்.
மேலும், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றை, பொது சேவை மையம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து, நேரடியாக இன்று நடக்கும் முகாமிற்கு வந்து உடனடியாக தீர்வு பெறலாம். இந்த வாய்ப்பை, ப.வேலுார் தாலுகாவுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, வட்ட வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.