/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ராசிபுரத்தில் இரவு முழுதும் கொட்டிய மழையால் அவதி ராசிபுரத்தில் இரவு முழுதும் கொட்டிய மழையால் அவதி
ராசிபுரத்தில் இரவு முழுதும் கொட்டிய மழையால் அவதி
ராசிபுரத்தில் இரவு முழுதும் கொட்டிய மழையால் அவதி
ராசிபுரத்தில் இரவு முழுதும் கொட்டிய மழையால் அவதி
ADDED : ஆக 07, 2024 02:10 AM
ராசிபுரம், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக, நேற்று முன்தினம் நடக்க இருந்த பருத்தி ஏலம் ரத்து செய்யப்பட்டது. அன்று இரவு கன மழை பெய்தது. நேற்று இரவும் விடாமல் கொட்டி தீர்த்த மழையால் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் சாலை முழுதும் மழைநீர் தேங்கி நின்றது.
ஏற்கனவே, மழை பெய்து மண் ஈரமாக இருந்ததால் மழை பெய்த சில நிமிடங்களிலேயே வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் களை எடுப்பது, மருந்து அடிப்பது உள்ளிட்ட வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டன.