Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ப.வேலுார் ஜி.ஹெச்.,ல் அரச மரத்தை அகற்ற எதிர்ப்பு

ப.வேலுார் ஜி.ஹெச்.,ல் அரச மரத்தை அகற்ற எதிர்ப்பு

ப.வேலுார் ஜி.ஹெச்.,ல் அரச மரத்தை அகற்ற எதிர்ப்பு

ப.வேலுார் ஜி.ஹெச்.,ல் அரச மரத்தை அகற்ற எதிர்ப்பு

ADDED : ஜூன் 29, 2024 03:01 AM


Google News
ப.வேலுார்: ப.வேலுார் அரசு மருத்துவமனையில், 100 ஆண்டு பழமையான அரசமரம் மற்றும் விநாயகர் கோவில் உள்ளது. தற்போது அரசு மருத்துவமனை விரிவாக்கத்திற்காக பணி நடந்து வருகிறது. அதனால் அரச மரத்தையும், விநாயகர் கோவிலையும் அகற்ற, நேற்று காலை பூமி பூஜை செய்தனர்.

இதையறிந்த பொதுமக்கள், 100 ஆண்டு பழமையான அரச மரத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் வாழ்ந்து வருகின்றன. அதனால், அந்த அரச மரத்தை அகற்றக்கூடாது என, டாக்டர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

ப.வேலுார் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, வி.ஏ.ஓ., மைதிலி, ஆர்.ஐ., தங்கமணி ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பொது மக்களின் எதிர்ப்பால், அரச மரத்தை அகற்றுவது நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us