/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கோகுல்ராஜ் குடும்பத்துக்கு இழப்பீடு திரும்ப பெறக்கோரி கலெக்டரிடம் மனு கோகுல்ராஜ் குடும்பத்துக்கு இழப்பீடு திரும்ப பெறக்கோரி கலெக்டரிடம் மனு
கோகுல்ராஜ் குடும்பத்துக்கு இழப்பீடு திரும்ப பெறக்கோரி கலெக்டரிடம் மனு
கோகுல்ராஜ் குடும்பத்துக்கு இழப்பீடு திரும்ப பெறக்கோரி கலெக்டரிடம் மனு
கோகுல்ராஜ் குடும்பத்துக்கு இழப்பீடு திரும்ப பெறக்கோரி கலெக்டரிடம் மனு
ADDED : ஜூன் 25, 2024 02:42 AM
நாமக்கல்: 'கோகுல்ராஜ் கொலை வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு வழங்கிய இழப்பீடு தொகையை திரும்ப பெறவேண்டும்' என, யுவராஜின் தாயார், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தார்.
சேலம் மாவட்டம், ஓமலுாரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர், 2015 ஜூன், 24ல், ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில், சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவன தலைவர் யுவராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், யுவராஜ் உட்பட சிலருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, மதுரை தாழ்த்தப்பட்டோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட யுவராஜின் தாயார் ரத்தினம் தலைமையில், யுவராஜ் ஆதரவாளர்கள், 100க்கும் மேற்பட்டோர், நாமக்கல் கலெக்டர் உமாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இதுகுறித்து, யுவராஜ் தாயார் ரத்தினம் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் குடும்பத்தினருக்கு, அரசு சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், ஐந்து லட்சத்து, 62,500 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. என் மகன் யுவராஜ், நாமக்கல் கலெக்டருக்கு அனுப்பிய மனுவில், 'அனைத்து துறை அதிகாரிகளையும், நிர்பந்தபடுத்தி உண்மைக்கு புறம்பான அறிக்கையை பெற்று, மக்களின் வரிப்பணத்தை சட்டத்திற்கு புறம்பாக இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. அந்த இழப்பீடு பணத்தை திரும்ப பெற வேண்டும்' என, தெரிவித்திருந்தார். மனு அனுப்பி, 60 நாட்களாகியும், கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், கலெக்டரிடம் நினைவூட்டல் மனு வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.