/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஆக்கிரமிப்புகளை அகற்ற காந்தி சிலையிடம் மனு ஆக்கிரமிப்புகளை அகற்ற காந்தி சிலையிடம் மனு
ஆக்கிரமிப்புகளை அகற்ற காந்தி சிலையிடம் மனு
ஆக்கிரமிப்புகளை அகற்ற காந்தி சிலையிடம் மனு
ஆக்கிரமிப்புகளை அகற்ற காந்தி சிலையிடம் மனு
ADDED : ஆக 02, 2024 01:28 AM
ராசிபுரம், நகராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, காந்தி சிலையிடம் கோரிக்கை மனு அளித்து மக்கள் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தவைர் இளங்கோ தலைமை வகித்தார். இணை செயலாளர் பழனிவேலு, மாநில இயக்குனர் சந்திரசேகர், ஈரோடு மாவட்ட தலைவர் சஞ்சய் சொக்கலிங்கம், மகளிர் அணி தொட்டியம் சித்ரா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஏடிசி டிப்போ, ஆண்டகலுார் கேட் ஆகிய பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். லாட்டரி, போதை பொருள் வினியோகத்தை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும். ராசிபுரம் நகரில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. முக்கியமாக ஒரு வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. காவல்துறை உதவியுடன், நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள், நெசவாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மான நகலை, நகராட்சியில் உள்ள காந்தி சிலையிடம் கோரிக்கை மனுவாக அளித்தனர். மனுவை வாங்க நகராட்சியில் கமிஷனர் இல்லாததால், காந்தி சிலையிடம் மனு அளித்தோம் என தலைவர் இளங்கோ கூறினார்.