/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குண்டும், குழியுமாக மாறிய பெருமாள் கோவில் சாலை குண்டும், குழியுமாக மாறிய பெருமாள் கோவில் சாலை
குண்டும், குழியுமாக மாறிய பெருமாள் கோவில் சாலை
குண்டும், குழியுமாக மாறிய பெருமாள் கோவில் சாலை
குண்டும், குழியுமாக மாறிய பெருமாள் கோவில் சாலை
ADDED : ஜூன் 18, 2024 12:18 PM
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், அலங்காநத்தத்தில் இருந்து பெருமாள் கோவில் கரட்டிற்கு செல்லும் தார்ச்சாலை உள்ளது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த தார்ச்சாலையில், இப்பகுதி விவசாயிகள், விவசாய பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சாலை கடந்த, 2 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதனால், உழவர் சந்தைக்கு காய்கறிகள் கொண்டு செல்லவும், மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லவும் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, பஞ்., நிர்வாகம், புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.