/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வல்லீஸ்வரர் கோவிலில் திருப்பணி அமைச்சர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி வல்லீஸ்வரர் கோவிலில் திருப்பணி அமைச்சர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி
வல்லீஸ்வரர் கோவிலில் திருப்பணி அமைச்சர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி
வல்லீஸ்வரர் கோவிலில் திருப்பணி அமைச்சர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி
வல்லீஸ்வரர் கோவிலில் திருப்பணி அமைச்சர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 30, 2024 02:17 AM
ப.வேலுார், ''குன்னமலை வல்லீஸ்வரர் கோவிலில், 4 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி மேற்கொள்ளப்படும்,'' என, ஹிந்த சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே, குன்னமலை கிராமத்தில், மலை குன்றில் பிரசித்தி பெற்ற வல்லீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
கொங்குநாட்டின் சிற்பங்களை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக்கூறும் வகையில் கோவிலை புனரமைக்க, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சட்டசபை மானிய கோரிக்கையில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 'குன்னமலை வல்லீஸ்வரர் கோவிலில், 4 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி மேற்கொள்ளப்படும்' என, நேற்று அறிவித்துள்ளார். அரசின் அறிவிப்பால், குன்னமலை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.