/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நல்லம்பள்ளி ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நல்லம்பள்ளி ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நல்லம்பள்ளி ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நல்லம்பள்ளி ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நல்லம்பள்ளி ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 13, 2024 07:03 AM
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் செல்வகணபதி, ஊர் மாரியம்மன், பழனி ஆண்டவர், ஊர் முனியப்பன் உள்ளிட்ட கோவில்கள் கட்டப்பட்டன.
கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 9- அன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜை, வழிபாடு நடந்தது. பின்னர், சிலைகள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று காலை யாகசாலையில் இருந்து, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காலை, 6:00 மணிக்கு மேல் செல்வகணபதி, ஊர் மாரியம்மன், பழனி ஆண்டவர், ஊர் முனியப்பன் கோவில் விமான கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் தெய்வங்களுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்கார மஹா தீபாராதனை நடந்தது.