Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

ADDED : ஜூன் 06, 2024 04:20 AM


Google News
ப.வேலுார்: கிருத்திகையையொட்டி, நேற்று ப.வேலுார் அருகே நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோவிலில் உள்ள ராஜா சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின், ராஜா சுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதேபோல், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில், 34.5 அடி உயரமுள்ள ஆறுமுக கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனுார் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பாலப்பட்டி கதிர்மலை ஸ்கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருக பெருமானுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us