/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அரசு பள்ளியில் கக்கன் பிறந்த நாள் கொண்டாட்டம் அரசு பள்ளியில் கக்கன் பிறந்த நாள் கொண்டாட்டம்
அரசு பள்ளியில் கக்கன் பிறந்த நாள் கொண்டாட்டம்
அரசு பள்ளியில் கக்கன் பிறந்த நாள் கொண்டாட்டம்
அரசு பள்ளியில் கக்கன் பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : ஜூன் 19, 2024 01:50 AM
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, அருவங்காடு அரசு உயர்நிலை பள்ளியில், சுதந்திர போராட்ட தியாகி கக்கன் பிறந்த நாள் விழா, விடியல் ஆரம்பம் அமைப்பாளர் பிரகாஷ், தலைமையாசிரியை லோகசுந்தரி தலைமையில் நடந்தது.
இதில், கக்கன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கக்கன் வரலாற்றை மாணவ, மாணவியர்களுக்கு, தமிழாசிரியை
கலைச்செல்வி
எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, பேச்சு, கட்டுரை, வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், புத்தகம் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் சுரேஷ், சரவணன், சோபனா, நிர்வாகிகள் தீனா, அங்கப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.