/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அரபு நாடுகளில் கடும் வெப்பம் நாமக்கல் முட்டை ஏற்றுமதி சரிவு அரபு நாடுகளில் கடும் வெப்பம் நாமக்கல் முட்டை ஏற்றுமதி சரிவு
அரபு நாடுகளில் கடும் வெப்பம் நாமக்கல் முட்டை ஏற்றுமதி சரிவு
அரபு நாடுகளில் கடும் வெப்பம் நாமக்கல் முட்டை ஏற்றுமதி சரிவு
அரபு நாடுகளில் கடும் வெப்பம் நாமக்கல் முட்டை ஏற்றுமதி சரிவு
ADDED : ஜூலை 17, 2024 06:48 PM
நாமக்கல்:'அரபு நாடுகளில் கோடை காலம் என்பதால், அங்கு முட்டை நுகர்வு குறைந்துள்ளது. இதனால், நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி சரிவடைந்துள்ளது' என, முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்தனர்.
நாமக்கல் மண்டலத்ததில், 1,000 முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் வளர்க்கப்படும், 5 கோடி கோழிகள் மூலம், தினமும், 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு, 70 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில், நாமக்கல் பகுதியில் இருந்து மட்டுமே முட்டை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் போன்ற ஐக்கிய அரபு நாடுகள், ஒரு சில ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மஸ்கட் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில், தற்போது கடும் கோடை காலம் என்பதால், வெப்பநிலை, 120 டிகிரி செல்ஷியசுக்கும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, அங்கு முட்டை நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது. அதனால், அந்நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதி சரிந்துள்ளது.
இதுகுறித்து, நாமக்கல்லை சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது:
மஸ்கட், ஓமன் நாடுகளில், தற்போது கோடை காலம் என்பதால், அங்குள்ள பள்ளி, விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வசிக்கும் இந்தியர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு திரும்பியதால், முட்டை நுகர்வு குறைந்துவிட்டது. ஒரு சில அரபு நாடுகளில் தற்போது கோழிப்பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தியும் செய்து வருகின்றன. இதுவும் முட்டை ஏற்றுமதி குறைந்ததற்கு காரணம். இன்னும் ஒரு மாதம் வரை அங்கு கோடைகாலம் நீடிக்கும். அதன்பின், இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதி சீரடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.