ADDED : ஜூன் 14, 2024 01:11 AM
ராசிபுரம், ராசிபுரம் முல்லா சாகிப் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஜாபர் மகன் சையத் முஸ்தபா, 60. இவர், ராசிபுரம் தினசரி மார்க்கெட் அருகே கருவாடு கடை நடத்தி வருகிறார். ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியில் தனியாக குடோன் எடுத்து, அதில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது, குடோனில், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 265 கிலோ எடையுள்ள குட்கா, புகையிலை பொருட்களை, 25 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சையத் முஸ்தபாவை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.