/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமகிரிப்பேட்டை அரசு பள்ளியில் நீட், ஜே.இ.இ., தேர்வுக்கு இலவச பயிற்சி நாமகிரிப்பேட்டை அரசு பள்ளியில் நீட், ஜே.இ.இ., தேர்வுக்கு இலவச பயிற்சி
நாமகிரிப்பேட்டை அரசு பள்ளியில் நீட், ஜே.இ.இ., தேர்வுக்கு இலவச பயிற்சி
நாமகிரிப்பேட்டை அரசு பள்ளியில் நீட், ஜே.இ.இ., தேர்வுக்கு இலவச பயிற்சி
நாமகிரிப்பேட்டை அரசு பள்ளியில் நீட், ஜே.இ.இ., தேர்வுக்கு இலவச பயிற்சி
ADDED : ஜூலை 21, 2024 02:43 AM
நாமகிரிப்பேட்டை;நாமகிரிப்பேட்டை அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'நீட்', ஜே.இ.இ.,க்கு இலவச பயிற்சி முகாம், நேற்று தொடங்கியது.
'வி தி லீடர்ஸ்' அறக்கட்டளை, அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகளை, இலவசமாக வழங்கி வருகிறது. அதன்படி, நாமகிரிப்பேட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான, 'நீட்', ஜே.இ.இ., நுழைவுத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, நேற்று தொடங்கியது. முதன்மை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் பயிற்சியின் நோக்கம், கிராம பகுதி மக்களுக்காக வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து விளக்கினார்.
நாமகிரிப்பேட்டை அரசுப்பள்ளி தலைமையாசிரியர் மலர்மணி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' நுழைவுத் தேர்வில் கிடைக்கும் இட ஒதுக்கீடு மற்றும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் எவ்வாறு பங்கேற்பது, மத்திய பல்கலையில் படிப்பதால் கிடைக்கும் அறிவுத்திறன் ஆகியவை குறித்து பேசினார்.
முன்னதாக, ஒருங்கிணைப்பாளர் சுகந்தி வரவேற்றார். தொடர்ந்து நுழைவுத்தேர்வுக்கான வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் அறிமுக நிகழ்ச்சி, நுழைவுத்தேர்வுக்கான வகுப்புகள் குறித்து விளக்கப்பட்டது. இதில், தொப்பப்பட்டி, முள்ளுக்குறிச்சி, மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.