/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விவசாயியின் மகன் இன்ஜினியரிங் தரவரிசை பட்டியலில் 3-வது இடம் விவசாயியின் மகன் இன்ஜினியரிங் தரவரிசை பட்டியலில் 3-வது இடம்
விவசாயியின் மகன் இன்ஜினியரிங் தரவரிசை பட்டியலில் 3-வது இடம்
விவசாயியின் மகன் இன்ஜினியரிங் தரவரிசை பட்டியலில் 3-வது இடம்
விவசாயியின் மகன் இன்ஜினியரிங் தரவரிசை பட்டியலில் 3-வது இடம்
ADDED : ஜூலை 10, 2024 11:35 PM
வெண்ணந்துார்:விவசாயியின் மகன் பொறியியல் சேர்க்கை தரவரிசை பட்டியலில், 3-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அருகே, தொட்டியபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், 49; மனைவி அன்னபூரணி, 39. இவர்களது மகன் கோகுல், 17. குருசாமிபாளையம் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், உயிரியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 படித்து முடித்து, 600க்கு, 597 மதிப்பெண் பெற்று, மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றார். மேலும், இயற்பியல், வேதியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட, நான்கு பாடங்களில், 100க்கு, 100 மதிப்பெண்ணும், தமிழ், 98, ஆங்கிலத்தில், 99 மதிப்பெண்ணும் பெற்றார். இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில், மாணவன் கோகுல், மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர், பெங்களூரில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் சேர்வது தான் லட்சியம் என்றும், அதன் பிறகு தான் பொறியியல் படிப்பில் சேர இருப்பதாக கூறினார்.