/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தமிழகம், கேரளாவில் முட்டை விலை உயர்வுதமிழகம், கேரளாவில் முட்டை விலை உயர்வு
தமிழகம், கேரளாவில் முட்டை விலை உயர்வு
தமிழகம், கேரளாவில் முட்டை விலை உயர்வு
தமிழகம், கேரளாவில் முட்டை விலை உயர்வு
ADDED : ஜூலை 08, 2024 07:20 AM
நாமக்கல்: நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 515 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 520 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த, 21ல் கொள்முதல் விலை, 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. 16 நாட்களுக்கு பின், 5 காசு உயர்ந்து, 520 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 580, ஐதராபாத், 525, விஜயவாடா, 545, பர்வாலா, 527, மும்பை, 595, மைசூரு, 565, பெங்களூரு, 560, கோல்கட்டா, 632, டில்லி, 550 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 87 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 118 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.