/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ எலந்தகுட்டை ஜி.ஹெச்.,ல் டாக்டர் இல்லாததால் அவதி எலந்தகுட்டை ஜி.ஹெச்.,ல் டாக்டர் இல்லாததால் அவதி
எலந்தகுட்டை ஜி.ஹெச்.,ல் டாக்டர் இல்லாததால் அவதி
எலந்தகுட்டை ஜி.ஹெச்.,ல் டாக்டர் இல்லாததால் அவதி
எலந்தகுட்டை ஜி.ஹெச்.,ல் டாக்டர் இல்லாததால் அவதி
ADDED : ஜூலை 08, 2024 07:36 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த எலந்தகுட்டை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், தினமும் இந்த அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். இப்பகுதியில், 100க்கு மேற்பட்ட நுாற்பாலைகள் உள்ளன. இந்த நுாற்பாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர் பலரும் உடல்நிலை பாதிக்கப்பட்டால், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தான் வருவர்.
இந்நிலையில், நேற்று சிகிச்சை பெற பலர் காத்திருந்தனர். ஆனால், அங்கிருந்த செவிலியர்கள், சிகிச்சைக்கு சென்றவர்களுக்கு மருந்து, மாத்திரை கொடுத்து, டாக்டர் இல்லை. நாளை (இன்று) வாருங்கள் என அனுப்பி வைத்தனர். இதனால், நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகினர்.