ADDED : ஆக 06, 2024 02:31 AM
ராசிபுரம்,ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், நேற்று அதிகாலை தொடங்கிய மழை, காலை, 6:00 மணி வரை பெய்தது.
இந்நிலையில், வாரந்தோறும் திங்கட்கிழமை ஆர்.சி.எம்.எஸ்., சார்பில் அக்கரைப்பட்டியில் நடக்கும் பருத்தி ஏலம், நேற்று ரத்து செய்யப்பட்டது. தொடர் மழை காரணமாக பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வரவில்லை இதனால் பருத்தி ஏலம் ரத்து செய்யப்பட்டதாகவும், அடுத்த வாரம் வழக்கம்போல் பருத்தி ஏலம் நடக்கும் எனவும், ஆர்.சி.எம்.எஸ்., நிர்வாகம் தெரிவித்தது.