/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ முதல் சுற்றில் சறுக்கிய கொ.ம.தே.க., 2வது சுற்றிலிருந்து முன்னிலை முதல் சுற்றில் சறுக்கிய கொ.ம.தே.க., 2வது சுற்றிலிருந்து முன்னிலை
முதல் சுற்றில் சறுக்கிய கொ.ம.தே.க., 2வது சுற்றிலிருந்து முன்னிலை
முதல் சுற்றில் சறுக்கிய கொ.ம.தே.க., 2வது சுற்றிலிருந்து முன்னிலை
முதல் சுற்றில் சறுக்கிய கொ.ம.தே.க., 2வது சுற்றிலிருந்து முன்னிலை
ADDED : ஜூன் 05, 2024 04:34 AM
நாமக்கல் : நாமக்கல் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையின் முதல் சுற்றில் சறுக்கிய, கொ.ம.தே.க., 2வது சுற்றில், அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, தொடர்ந்து முன்னிலை வகித்து வெற்றி பெற்றார்.
நாமக்கல் லோக்சபா தொகுதியில், ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. அங்கு பதிவான ஓட்டுகள், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில் நுட்ப கல்லுாரியில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்தில், நேற்று காலை, 8:00 மணிக்கு முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது. தொடர்ந்து, 8:30 மணிக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது.
நாமக்கல் லோக்சபா தொகுதியில் உள்ள, 6 சட்ட சபை தொகுதிகளிலும், முதல் சுற்றின் முடிவில், அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி, தி.மு.க., கூட்டணியில் உள்ள, கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரனை விட, 1,089 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார். இதையடுத்து, இரண்டாவது சுற்றில், கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரன், அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணியை விட, 2,095 ஓட்டுகள் அதிகம் பெற்றார். அதை தொடர்ந்து, 3வது சுற்றில், 2,189, 4வது சுற்றில், 3,161, 5வது சுற்றில், 1,817, 6வது சுற்றில், 4,265, 7வது சுற்றில், 8,183, 8வது சுற்றில், 10,450, 9வது சுற்றில்,
12, 720, 10வது சுற்றில், 15,908, 11வது சுற்றில், 19,029,
12 வது சுற்றில், 21,707, 13வது சுற்றில், 23,054, 14வது சுற் றில், 25,084, 15வது சுற்றில், 27,197, 16வது சுற்றில்,
28,710, 17வது சுற்றில், 27,726, 18வது சுற்றில், 27,701,
19 வது சுற்றில், 28,780, 20வது சுற்றில், 28,187, 21வது சுற்றில், 28,959, 22வது சுற்றில், 28,704, 23வது சுற்றில், 29,112 ஓட்டுகள் அதிகம் பெற்று, மாதேஸ்வரன் வெற்றி பெற்றார்.
மேலும், 23வது சுற்று முடிவில், கொ.ம.தே.க., மாதேஸ்வரன், ௪,62,036, அ.தி.மு.க., தமிழ்மணி,
4,32, 924 ஓட்டுகள், பா.ஜ., ராமலிங்கம், ௧,௦௪,௬௯௦ ஓட்டுகள், நா.த.க., கனிமொழி, ௯௫,௫7௭ ஓட்டுகள் பெற்றனர். நோட்டாவுக்கு, 12,708 ஓட்டுகள் விழுந்தது குறிப்பிடத்தக்கது.