/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் பொதுமக்கள் பயன்பெற அழைப்பு 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் பொதுமக்கள் பயன்பெற அழைப்பு
'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் பொதுமக்கள் பயன்பெற அழைப்பு
'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் பொதுமக்கள் பயன்பெற அழைப்பு
'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் பொதுமக்கள் பயன்பெற அழைப்பு
ADDED : ஜூன் 16, 2024 12:49 PM
நாமக்கல்: 'வரும், 19ல் திருச்செங்கோடு தாலுகாவில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடக்கிறது. அதில், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
திருச்செங்கோடு தாலுகாவில், அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை, முதல்வர், 2023 நவ., 23ல் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம் ஆகிய தாலுகாக்களில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இத்திட்டப்படி, கலெக்டர் உமா, மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், வரும், 19 காலை, 9:00 முதல், மறுநாள் காலை, 9:00 மணி வரை, திருச்செங்கோடு தாலுகாவில் தங்கி, பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்கின்றனர்.
மாலை, 4:00 முதல், 6:00 வரை, திருச்செங்கோடு பி.டி.ஓ., அலுவலகத்தில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்படும். மாலை, 6:00 முதல் கள ஆய்வு அறிக்கையுடன் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் ஆய்வு கூட்டம் நடக்கிறது. அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற ஏதுவாக, இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.