/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குழாய் உடைந்து பீய்ச்சியடித்த குடிநீர்: அதிகாரிகள் விசாரணை குழாய் உடைந்து பீய்ச்சியடித்த குடிநீர்: அதிகாரிகள் விசாரணை
குழாய் உடைந்து பீய்ச்சியடித்த குடிநீர்: அதிகாரிகள் விசாரணை
குழாய் உடைந்து பீய்ச்சியடித்த குடிநீர்: அதிகாரிகள் விசாரணை
குழாய் உடைந்து பீய்ச்சியடித்த குடிநீர்: அதிகாரிகள் விசாரணை
ADDED : ஜூலை 12, 2024 01:14 AM
நாமக்கல், நாமக்கல்லில், குழாய் உடைந்து தண்ணீர் பீய்ச்சியடித்து வெளியேறி வீணாகியது.
மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து, ராட்சத குழாய் பதிக்கப்பட்டு நாமக்கல் நகர் குடியிப்புகளுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மோகனுாரில் இருந்து நாமக்கல் வரை, சாலையின் அடியில் பதிக்கப்பட்ட குழாயில் கொண்டு வரப்படும் தண்ணீர், நகர் பகுதியில் உள்ள பல்வேறு தொட்டிகளில் ஏற்றப்பட்டு, குறிப்பிட்ட நேரங்களில் மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. வனத்துறை அலுவலகம் அருகே, சாலையின் அடியில் பதிக்கப்பட்ட குழாய் நேற்று காலை, 8:00 மணியளவில் உடைப்பு ஏற்பட்டு, அதில் இருந்து தண்ணீரானது, 20 அடி உயரத்திற்கும் மேல் பீய்ச்சியடித்தது. அதை அந்த வழியாக சென்றவர்கள் வேடிக்கை பார்த்து சென்றனர். தொடர்ந்து ஏராளமான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகியது.
இது குறித்து சிலர், நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, 11:00 மணியளவில் சரி செய்யப்பட்டு தண்ணீர் நிறுத்தப்பட்டது. சம்மந்தப்பட்ட இடத்தை, அலுவலர்கள் பார்வையிட்டு குழாய் உடைந்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.