Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அரப்பளீஸ்வரர் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

அரப்பளீஸ்வரர் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

அரப்பளீஸ்வரர் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

அரப்பளீஸ்வரர் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ADDED : ஆக 01, 2024 02:01 AM


Google News
சேந்தமங்கலம்: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கொல்லிமலை அரப்பளீஸ்-வரர் கோவிலில் கொடியேற்ற விழா நடந்தது.

கொல்லிமலையில், பிரசித்தி பெற்ற அறம் வளர்த்த நாயகி உட-னுரை அரப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டா-டப்படும். இந்தாண்டுக்கான ஆடித்திருவிழா, நேற்று கொடியேற்-றத்துடன் கோலாகலமாக துவங்கியது. அதை தொடர்ந்து, இன்று அரப்பளீஸ்வரருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 2ல் உற்சவ மூர்த்தி உட் பிரகாரம் வலம் வருதல், திருக்கல்யாண உற்சவமும்; 3ல் சந்திரசேகரர், அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா, சோமஸ்கந்தர் பல்-லக்கில் வீதி உலா, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us