ADDED : ஜூலை 12, 2024 01:12 AM
ப.வேலுார், ---
சாலை விபத்தில் பெண் பலியானார்.
நாமக்கல் மாவட்டம். ப.வேலுார் அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி புஷ்பா, 45. இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில், ப.வேலுாரில் இருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். பொய்யேரி அருகே சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில், படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ப.வேலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, புஷ்பா மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் ஓட்டிய நபர் குறித்து விசாரிக்கின்றனர்.