/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வெறிநாய் கடித்து ஆடு பலி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வெறிநாய் கடித்து ஆடு பலி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வெறிநாய் கடித்து ஆடு பலி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வெறிநாய் கடித்து ஆடு பலி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வெறிநாய் கடித்து ஆடு பலி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : ஜூன் 18, 2024 12:12 PM
நாமக்கல்: நாமக்கல் அருகே, வெறிநாய் கடித்து ஆடு பலியானது. தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அடுத்த காதப்பள்ளி பஞ்.,க்குட்பட்ட அழகியகவுண்டம்பாளையத்தில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அனைவரும் விவசாயத்துடன், ஆடு வளர்ப்பை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இந்த கிராமத்திற்கு அடிக்கடி வெறிநாய்கள் வந்து ஆடுகளை கடித்து அட்டகாசம் செய்கின்றன. இதனால் ஆடு வளர்ப்போர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இதுபோல், நேற்று, அழகியகவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த நடேசன், 60, தோட்டத்தில், அமைக்கப்பட்டிருந்த பட்டியில் ஆடுகள் அடைக்கப்பட்டிருந்தது. 5 வெறிநாய்கள் அங்கு கூட்டமாக வந்து ஆடுகளை கடித்து குதறின. ஆடுகள் கத்தும் சத்தம் கேட்ட நடேசன், அங்கு சென்று பார்த்தபோது வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறிக்கொண்டிருந்தது தெரிந்தது. அந்த நாய்களை நடேசன் விரட்டியடித்தார். இதில், 10,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஆடு இறந்தது. 5 ஆடுகள் காயமடைந்தன.
இப்பகுதியில், வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.