/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பிரதான குழாயில் உடைப்பு பெருக்கெடுத்து ஓடிய குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்
பிரதான குழாயில் உடைப்பு பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்
பிரதான குழாயில் உடைப்பு பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்
பிரதான குழாயில் உடைப்பு பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்
ADDED : ஜூன் 14, 2024 01:40 AM
மோகனுார், மோகனுார் காவிரி ஆற்றில் கிணறுகள் வெட்டி, அதிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் நாமக்கல் நகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்கின்றனர். குடிநீர் குழாய், மோகனுார் டவுன் பஞ்சாயத்து வழியாக செல்கிறது. இந்நிலையில், நாமக்கல் சாலையில் தனியார் ஒருவர் கட்டடம் கட்டி வருகிறார். கட்டடத்தின் முன் பகுதியில் சீர்படுத்துவதற்கு, பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளியுள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக நாமக்கல் நகராட்சி பகுதிக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாய் உடைந்தது. தண்ணீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடத்தொடங்கியது. நாமக்கல் சாலை முழுதும் தண்ணீர் ஓடியது. அருகிலிருந்த கடைக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. மேலும், அப்பகுதி சாலை முழுதும் தண்ணீர் வெல்லம் போல் ஓடியது. இதையறிந்த மோகனுார் டவுன் பஞ்., ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்களாலும் தண்ணீரை நிறுத்த முடியவில்லை. தொடர்ந்து, நீரேற்று நிலையத்திற்கு தகவல் கொடுத்து மோட்டாரை அணைத்தனர். அதன்பின், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வடிந்தது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.