குட்கா விற்பனை 5 கடைகளுக்கு 'சீல்'
குட்கா விற்பனை 5 கடைகளுக்கு 'சீல்'
குட்கா விற்பனை 5 கடைகளுக்கு 'சீல்'
ADDED : ஜூலை 04, 2024 11:08 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதி களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த செல்வகுமார், 34, மனோகரன், 36, மோகன்ராஜ், 27, முத்துலட்சுமி, 45, தியாகராஜன், 48, ஆகியோரின் கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. மேலும், ஐந்து கடைக்கு, தலா, 25,000 ரூபாய் வீதம், 1.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேற்கண்ட நடவடிக்கையை உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கநாதன் மற்றும் குமாரபாளையம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஜான்ராஜா ஆகியோர் மேற்கொண்டனர்.