Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 21ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

21ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

21ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

21ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ADDED : மார் 15, 2025 02:29 AM


Google News
21ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்:'நாமக்கல்லில், வரும், 21ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும், 21 காலை, 10:30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்ட் போன்ற பணிகளுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர், பிளஸ் 2 வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பயிற்சி மற்றும் கணினியியல் முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதி உள்ளோரும், இம்முகாமில் பயன்பெறலாம்.

மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும், இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும், ஆலோசனையும் வழங்கப்படும்.

இம்முகாமில் பங்குபெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. வேலையளிப்போரும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, 04286-222260 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us