/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 2 ஆண்டுக்கு முன் 6 பவுன் திருட்டு போக்கு காட்டியவர் சுற்றிவளைப்பு 2 ஆண்டுக்கு முன் 6 பவுன் திருட்டு போக்கு காட்டியவர் சுற்றிவளைப்பு
2 ஆண்டுக்கு முன் 6 பவுன் திருட்டு போக்கு காட்டியவர் சுற்றிவளைப்பு
2 ஆண்டுக்கு முன் 6 பவுன் திருட்டு போக்கு காட்டியவர் சுற்றிவளைப்பு
2 ஆண்டுக்கு முன் 6 பவுன் திருட்டு போக்கு காட்டியவர் சுற்றிவளைப்பு
ADDED : ஜூலை 14, 2024 03:29 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த சீரப்பள்ளியை சேர்ந்தவர் ராஜா மகன் பாலு, 35. இவரது உறவினரான மெட்டாலா அருகேயுள்ள நாரைக்கிணறு, சிவா நகரிலுள்ள செல்வம், 40, என்பவரின் வீட்-டிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்றுள்ளார். அங்கு, 2 நாட்கள் தங்கி உள்ளார். அப்போது செல்வத்தின் மனைவி, விசே-ஷத்திற்கு செல்வதற்காக நகை வைத்துள்ள பீரோவை பார்த்-துள்ளார். அப்போது, 6 பவுன் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி-யடைந்தார். அப்போது, 2 நாட்களாக அவரது உறவினரான பாலுவை தவிர வேறு யாரும் வீட்டில் வரவில்லை. இதனால் பாலுவை விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த பாலு, அந்த இடத்தில் இருந்து வேகமாக பைக்கை எடுத்துக்-கொண்டு சென்றார்.
பாலு மீது ஆயில்பட்டி போலீசாரிடம் செல்வம் புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலுவின் செல்போன் சிக்னல் மூலம் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால், பாலுவை கண்டுபிடிக்க முடியவில்லை. நகையை பறிகொடுத்த செல்வம் மற்றும் அவரது நண்பர்களின் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடினார். நேற்று, பாலு, ஆத்துார் அருகேயுள்ள ஒரு சேகோ பேக்டரியில் வேலை செய்து வந்தது தெரிந்தது. அங்கு சென்ற செல்வம், பாலுவை பிடித்து ஆயில்பட்டி போலீசில் ஒப்ப-டைத்தார்.
பாலுவிடம் நடத்திய விசாரணையில், செல்வம் வீட்டில் நகையை திருடியதாக பாலு ஒப்புக்கொண்டார். மேலும், நகையை நாமகிரிப்பேட்டையில் உள்ள ஒரு நகைக்கடையில் ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் பாலுவை கைது செய்ததுடன் நகை கடையிலும் விசா-ரித்து வருகின்றனர்.