Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஏப்., 1ல் கோடைகால நீச்சல் பயிற்சிதொடக்கம்: விண்ணப்பம் வரவேற்பு

ஏப்., 1ல் கோடைகால நீச்சல் பயிற்சிதொடக்கம்: விண்ணப்பம் வரவேற்பு

ஏப்., 1ல் கோடைகால நீச்சல் பயிற்சிதொடக்கம்: விண்ணப்பம் வரவேற்பு

ஏப்., 1ல் கோடைகால நீச்சல் பயிற்சிதொடக்கம்: விண்ணப்பம் வரவேற்பு

ADDED : மார் 27, 2025 01:35 AM


Google News
ஏப்., 1ல் கோடைகால நீச்சல் பயிற்சிதொடக்கம்: விண்ணப்பம் வரவேற்பு

நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம், வரும் ஏப்., 1 முதல், மாவட்ட விளையாட்டு பயிற்சி திடலில் உள்ள நீச்சல் குளத்தில் தொடங்குகிறது. விருப்பமுள்ளவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். நீச்சல் பயிற்சி, 12 நாட்களுக்கு கட்டணம், 1,416 ரூபாய். இத்தொகையை, ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நடக்கும், 12 நாட்கள் பயிற்சி முகாம், 5 கட்டங்களாக நடக்கிறது.

ஏப்., 1 முதல் 13 வரை; ஏப்., 15 முதல் 27 வரை; ஏப்., 29 முதல் மே, 11 வரை; மே, 13 முதல் 25 வரை; மே, 27 முதல் ஜூன், 8 வரை, என, ஐந்து கட்டங்களாக பயிற்சியளிக்கப்படுகிறது. நீச்சல் பயிற்சி நேரம், காலை, 6:00 முதல், 7:00 மணி வரை; 7:00 முதல், 8:00 மணி; 8:00 முதல், 9:00 மணி என, மூன்று பிரிவுகளாக நடத்தப்படும். மேலும், மாலை, 4:00 முதல், 5:00 மணி; 5:00 முதல், 6:00 மணி என, இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும். விபரங்களுக்கு, 8220310446 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். நீச்சல் தெரிந்தவர்களுக்கு, காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு, ஒரு நபருக்கு, 59 ரூபாய் செலுத்தி நீச்சல் பயிற்சி பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us