Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஒன்றிய அளவில் மட்டும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த திருத்திய அட்டவணை வெளியிட 'டிட்டோஜாக்' தர்ணா

ஒன்றிய அளவில் மட்டும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த திருத்திய அட்டவணை வெளியிட 'டிட்டோஜாக்' தர்ணா

ஒன்றிய அளவில் மட்டும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த திருத்திய அட்டவணை வெளியிட 'டிட்டோஜாக்' தர்ணா

ஒன்றிய அளவில் மட்டும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த திருத்திய அட்டவணை வெளியிட 'டிட்டோஜாக்' தர்ணா

ADDED : ஜூலை 04, 2024 07:32 AM


Google News
நாமக்கல், : 'ஒன்றிய அளவில் மட்டுமே இடமாறுதல் கலந்தாய்வு நடத்த, திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை வெளியிட வலியுறுத்தி' டிட்டோஜாக் அமைப்பினர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவ-டிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், தர்ணா போராட்டம், நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி பஞ்., நடு-நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட அமைப்பாளர்கள் பழனி-யப்பன், சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில உயர்மட்-டக்குழு உறுப்பினர் முருக செல்வராசன் துவக்கி வைத்தார். போராட்டத்தில், தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும், 90 சதவீதம் ஆசிரியர்களை பெரிதும் பாதிக்கும், மாநில பணிமூப்பு திணிக்கும், ஒன்றிய, நகராட்சி பணிமூப்பு மறுக்கும் அரசா-ணையை ரத்து செய்ய வேண்டும். தொடக்கக்கல்வி ஆசிரியர்-களின் பொதுமாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகள், பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு, ஒன்றிய அளவில் மட்டும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தும் வகையில், திருத்திய கலந்-தாய்வு கால அட்டவணை வெளியிட வேண்டும்.

தமிழக அரசின் இடமாறுதல் கொள்கையின் நெறிமுறைகளை காற்றில் பறக்கவிடும் அளவிற்கு, மேலிட பரிந்துரைகள் என்ற பெயரில், வரைமுறையற்ற வகையில் பிறப்பிக்கப்படும் லஞ்ச-, லாவண்ய மற்றும் ஊழல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், முறைகேடாக மாநிலம் முழுதும் வழங்கப்பட்டுள்ள விதிமீறிய இடமாறுதல்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியு-றுத்தி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து, கலந்தாய்வு நடக்கும் மையம் முன், தர்ணா போராட்-டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன், கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.

'ஆசிரியர்களை அனுமதித்தால் தகராறு செய்வோம்'

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் முருக செல்வராசன், கலந்தாய்வு நடத்திய மாவட்ட தொட்டக்க-கல்வி அலுவலர் பாலசுப்ர

மணியத்திடம் சென்று, 'பணியிடம் கேட்டு கலந்தாய்விற்கு வரும் ஆசிரியர்களை அனுமதிக்க கூடாது. அப்படி அனும-தித்தால் நாங்கள் உள்ளே வந்து தகராறில் ஈடுபடுவோம். எங்களு-டைய உறுப்பினர்கள் ஏதாவது செய்தாலும் செய்து விடுவார்கள்' என, மிரட்டும் வகையில் பேசினார். அவரது பேச்சால் அரசு அலு-வலர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us