/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க மனு அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க மனு
அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க மனு
அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க மனு
அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க மனு
ADDED : ஜூலை 04, 2024 07:32 AM
நாமக்கல் : அரசு பள்ளி மாணவர்களுக்கு, மனவளக்கலை யோகா பயிற்சியை இலவசமாக அளிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் கலெக்டர் உமாவிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆழியாறு அறிவு திருக்கோவில் விரிவாக்க இயக்குனர் தங்க-வேலு, சேலம் மண்டல உலக சமுதாய சேவா சங்கத்தின் வளர்ச்சி மற்றும் ஆலோசனை குழு தலைவர் உதயகுமார், சேலம் மண்டல துணைத்தலைவர் கந்தசாமி ஆகியோர், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவசமாக யோகா பயிற்சியளிக்க நட-வடிக்கை எடுக்க வேண்டும் என, நாமக்கல் கலெக்டர் உமாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், 'மாணவர்களுடைய நடத்தை மாற்றம், அவர்களுக்-கான எதிர்காலத்தை பற்றிய லட்சியம், இவற்றையெல்லாம் இந்த யோகாவின் மூலம் பயன்பட வேண்டும்' என்றதுடன், பயிற்சிய-ளிப்பதற்கு ஆவன செய்வதாக உறுதியளித்தார்.