Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'நீட்' தேர்வு விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கணும்: எம்.பி., பேச்சு

'நீட்' தேர்வு விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கணும்: எம்.பி., பேச்சு

'நீட்' தேர்வு விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கணும்: எம்.பி., பேச்சு

'நீட்' தேர்வு விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கணும்: எம்.பி., பேச்சு

ADDED : ஜூலை 04, 2024 07:35 AM


Google News
நாமக்கல், : 'முதல்வர் ஸ்டாலினால், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, 'நீட்' தேர்வு விலக்கு தீர்மானத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்' என, மாநிலங்களவையில், எம்.பி., ராஜேஸ்-குமார் பேசினார். பார்லிமென்டின் மாநிலங்களவையில், எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது:'நீட்' தேர்வை ஆரம்ப காலம் முதலே, தி.மு.க., எதிர்த்து வருகிறது. 'நீட்' தேர்வு பாதிப்பால், தமிழகத்தில் மாணவி அனிதா தொடங்கி சதீஷ்குமார் வரை, 22 பேர் இறந்துள்ளனர்.

'நீட்' தேர்வு விலக்கு என்பது தான் எங்கள் இலக்கு எனக்கூறி, அமைச்சர் உதயநிதி, 2023 அக்.,ல், மக்கள் இயக்கத்தை தொடங்கினார். 50 நாட்கள் இலக்கு வைத்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார். அதில், 1.10 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள், 'நீட்' தேர்வால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்ததால் தான், 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, தொடர்ந்து போராடி வருகிறோம்.சமீபத்தில், சட்டசபையில், முதல்வர் ஸ்டாலினால், 'நீட்' தேர்-வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, ஒட்டுமொத்தமாக தீர்-மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்-ளது. அதற்கு, மத்திய அரசு, 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்-திற்கு விளக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us