ADDED : ஜூலை 03, 2024 07:44 AM
சேந்தமங்கலம் : சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டி பஞ்.,ல் பசுமை கிராம திட்ட துவக்க விழா நடந்தது. பஞ்., தலைவர் அருள்ராஜேஸ் தலைமை வகித்தார்.
இதில், ரத்தின சபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவ-னத்தின் ஒருங்கிணைப்பில், கரூர் வைஸ்யா வங்கி சமூக பொறுப்பு நிதி உதவியில், முத்துக்காப்பட்டி பஞ்., குடிநீர் மோட்டார் இயங்கும் திட்டமும், பஞ்., பொது இடத்தில் வேலி அமைத்து சொட்டு நீர் பாசனத்துடன் அடர்வனம் அமைக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இதில், கிராமிய வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் தில்லை சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.