/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற திட்டம் ரத்து செய்ய வலியுறுத்தி 20ல் மனித சங்கிலி புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற திட்டம் ரத்து செய்ய வலியுறுத்தி 20ல் மனித சங்கிலி
புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற திட்டம் ரத்து செய்ய வலியுறுத்தி 20ல் மனித சங்கிலி
புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற திட்டம் ரத்து செய்ய வலியுறுத்தி 20ல் மனித சங்கிலி
புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற திட்டம் ரத்து செய்ய வலியுறுத்தி 20ல் மனித சங்கிலி
ADDED : ஜூலை 17, 2024 09:13 AM
ராசிபுரம், : 'ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி, வரும், 20ல் மனித சங்கிலி அறவழி போராட்டம் நடத்துவது' என, ஆலோ-சனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்-டது.
மக்கள் நலக்குழுவின் ஆலோசனை கூட்டம், ராசிபுரத்தில் நடந்தது. குழு தலைவர் பாலு தலைமை வகித்தார். கவுரவத்தலைவர் ஜெய்பி-ரகாஷ் வரவேற்றார். முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதி-காரி தங்கவேல் முன்னிலை வகித்தார். கூட்-டத்தில், தற்போது நடைமுறையில் பொதுமக்க-ளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை அணைப்பாளையம் கிராமத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான நக-ராட்சி தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, வரும், 20 காலை, 11:00 மணிக்கு, ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட், எம்.ஜி.ஆர்., சிலை அருகே, 'மனித சங்கிலி' அறவழி போராட்டம் நடத்தப்பட உள்ளது. மேலும், தற்-போதைய பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்-யாமல் பாதுகாக்கும் வகையில், அரசியல் கட்-சிகள்,- சேவை அமைப்புகள் முன்னெடுக்கும் அனைத்து ஜனநாயக வழியிலான போராட்டங்-களை, ராசிபுரம் மக்கள் நலக்குழு முழு மனதாக ஆதரிக்கிறது என்பன உள்பட பல்வேறு தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன.