/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பாரதியார், குடியரசு தின பூப்பந்து விளையாட்டு போட்டி துவக்கம் பாரதியார், குடியரசு தின பூப்பந்து விளையாட்டு போட்டி துவக்கம்
பாரதியார், குடியரசு தின பூப்பந்து விளையாட்டு போட்டி துவக்கம்
பாரதியார், குடியரசு தின பூப்பந்து விளையாட்டு போட்டி துவக்கம்
பாரதியார், குடியரசு தின பூப்பந்து விளையாட்டு போட்டி துவக்கம்
ADDED : ஜூலை 24, 2024 07:19 AM
நாமக்கல் : ஆண்டுதோறும், பாரதியார் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடப்படுகிறது. அதில், 14, 17, 19 வயதுக்கு உட்-பட்ட என, மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்படும்.
அதன்படி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்-ளியில், நேற்று முதல் போட்டியாக, 14 வயதிற்கு உட்பட்ட மாணவியருக்கான பூப்பந்து விளையாட்டு போட்டி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில், அலங்காநத்தம் அரசு உயர்நி-லைப்பள்ளி, நாமக்கல் ஸ்பெக்ட்ரம் அகாடமி மேல்நிலைப்-பள்ளி, எஸ்.பி.எம்., உயர்நிலைப்பள்ளி வீராங்கனைகள் பங்கேற்-றனர். போட்டி முடிவில், எஸ்.பி.எம்., உயர்நிலைப்பள்ளி முத-லிடம், ஸ்பெக்டரம் அகாடமி மேல்நிலைப்பள்ளி இரண்டா-மிடம் பிடித்தது. நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்-பள்ளி தலைமையாசிரியர் சீனிவாச ராகவன், உதவி தலைமையா-சிரியர் ராமு, உடற்கல்வி இயக்குனர் செல்லம்மாள், உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணன், அன்பு செழியன் மற்றும் பலர் பங்கேற்-றனர்.