/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பைக்குடன் 20 அடி பள்ளத்தில்விழுந்த வாலிபர் உயிரிழப்பு பைக்குடன் 20 அடி பள்ளத்தில்விழுந்த வாலிபர் உயிரிழப்பு
பைக்குடன் 20 அடி பள்ளத்தில்விழுந்த வாலிபர் உயிரிழப்பு
பைக்குடன் 20 அடி பள்ளத்தில்விழுந்த வாலிபர் உயிரிழப்பு
பைக்குடன் 20 அடி பள்ளத்தில்விழுந்த வாலிபர் உயிரிழப்பு
ADDED : மார் 14, 2025 02:01 AM
பைக்குடன் 20 அடி பள்ளத்தில்விழுந்த வாலிபர் உயிரிழப்பு
சேந்தமங்கலம்:கொல்லிமலையில், மைல் கல் மீது பைக் மோதிய விபத்தில், 20 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
கொல்லிமலை யூனியன், குண்டூர்நாடு கருத்தணி கிராமத்தை சேர்ந்தவர் கிருபானந்தன், 21. இவர், மேக் சீனிக்காடு பகுதியில், உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம், கருத்தணியில் இருந்து பைக்கில் சென்றுள்ளார். எடப்புக் காடை இரண்டாவது வளைவில் சென்ற போது, அங்கிருந்த மைல் கல் மீது பைக் மோதி, 20 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
வாழவந்தி நாடு போலீசார் விசாரித்து
வருகின்றனர்.