ADDED : ஜூலை 05, 2025 01:42 AM
நாமக்கல், நாமக்கல் அடுத்த சிலுவம்பட்டியில் மஹா கணபதி, ஓங்காளியம்மன், மருதகாளியம்மன், மட்டபாறை மருதகாளியம்மன் மற்றும் நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களுக்கு, வரும், 7ல் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, நேற்று காலை மங்கள கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது.
இன்று காலை, விக்னேஷ்வரர் பூஜை, நவகிரக ேஹாமம், மாலை யாக சாலை பிரவேசம், முதல்கால யாகவேள்வியும் நடந்தது. நாளை, திருப்பள்ளி எழுச்சி, திருமுறைபாராயணம், இரண்டாம்கால யாக வேள்வி, கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும், இரவு மூன்றாம் கால யாக வேள்வியும் நடக்கிறது.
வரும், 7 அதிகாலை வேள்விக்குடங்கள் யாக சாலையில் இருந்து புறப்பாடும், காலை, 6:00 மணிக்கு மேல் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகமும், தொடர்ந்து ஓங்காளியம்மனுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. 9:30 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.