பவானிசாகருக்கு சரிந்தது நீர்வரத்து
பவானிசாகருக்கு சரிந்தது நீர்வரத்து
பவானிசாகருக்கு சரிந்தது நீர்வரத்து
ADDED : ஜூன் 02, 2025 06:48 AM
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம். நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, 81 அடியை தொட்டது.
தற்போது மழை இல்லாததால் நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று நீர்வரத்து, 1,327 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம், 81.95 அடி; நீர் இருப்பு, 16.7 டி.எம்.சி.,யாக இருந்தது.