/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ திருச்செங்கோட்டில் தேசியக்கொடி ஊர்வலம் திருச்செங்கோட்டில் தேசியக்கொடி ஊர்வலம்
திருச்செங்கோட்டில் தேசியக்கொடி ஊர்வலம்
திருச்செங்கோட்டில் தேசியக்கொடி ஊர்வலம்
திருச்செங்கோட்டில் தேசியக்கொடி ஊர்வலம்
ADDED : மே 22, 2025 01:47 AM
திருச்செங்கோடு இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பா.ஜ., சார்பில் திருச்செங்கோட்டில் தேசியக்கொடி ஊர்வலம் நடந்தது. திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ரவுண்டானாவில் துவங்கிய ஊர்வலம், சங்ககிரி ரோடு, அண்ணா சிலை, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத, வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக சென்று, மீண்டும் அண்ணாதுரை சிலையில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில், ராணுவ வீரர்களை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். பா.ஜ., சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் ராமலிங்கம், இந்திய ராணுவ வீரர்களின் உழைப்பையும், பாகிஸ்தானின் முயற்சியை முறியடிக்கும் விதத்தில் ராஜதந்திரத்துடன் நடந்து கொண்டம் விதம் குறித்து பாராட்டி பேசினார்.
த.மா.கா., நாமக்கல் மாவட்ட தலைவர் செல்வகுமார், பாடி பில்டிங் அசோசியேஷன் தலைவர் வெள்ளியங்கிரி, நாமக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் மகேஸ்வரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.